கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

இன்று முதல் சி.பி.ஐ. விசாரணை-? (சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு சூடுபிடிக்கிறது)

சாத்தான்குளம், ஜுலை.10
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிசிஐடி போலீசாரால் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இன்று முதல் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே
சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்
கொண்டு 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடம் ஒருபுறம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று முதல் சிபிஐ இந்த விசாரணை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட வர்களை காவலில் எடுத்து விசாரிக்க 15 நாட்களுக்குள் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்
பாக தானே முன் வந்து
விசாரணை மேற்
கொண்ட மதுரை உயர்
நீதிமன்ற கிளை,இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்று கருத்தை தெரிவித்ததுடன் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது.
அதன் பிறகு இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் முதல் கட்டமாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதனையடுத்து 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தமாக 10 பேர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருந்த நிலையில், இன்று முதல் சிபிஐ இந்த வழக்கில் விசாரணை தொடங்க இருக்கிறது.