கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பும்&பலியும் புதிய உச்சம்! (மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2403 ஆக உயர்வு)

சென்னை, ஜுலை.19&
தமிழ்நாட்டில் கொரோனா பரிசோத
னைகள் அதிகமாக மேற்
கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்றும் 48 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்
பட்டதில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிக
பட்சமாக 4807 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே
தமிழ்நாட்டில் கொரோனா
பாதிப்பு எண்ணிக்கை 1,65,714ஆக அதிகரித்
துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக கட்டுக்குள் வந்த நிலையில், நேற்று பாதிப்பு கட்டுக்குள்ளேயே உள்ளது. நேற்று 1219 பேருக்கு தொற்று உறுதியானதால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 84598ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு ஒருபுறம் அதிகரிக்கும் அதேவேளையில், அதிக
மானோர் குணமடைந்தும் வருகின்றனர்.
நேற்று 3049 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எனவே குணமடைந்தோர் எண்
ணிக்கை 1,13,856ஆக அதிக
ரித்துள்ளது. 49452 பேர் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக 88 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 2403ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் இணை நோய் இல்லாத
வர்கள் 6 பேர். நேற்று ஒரே நாளில் தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய இரண்டுமே உச்சபட்சம். என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மதுரை 185, தஞ்சாவூர் 181 , தேனி 144 , தூத்துக்குடி 161, திருவண்ணாமலை 72, திருநெல்வேலி 161 , திருச்சி 124 ,வேலூர் 191 , விழுப்புரம் 96 , விருதுநகர் 179 , காஞ்சிபுரம் 97 , கோவை 118 , கடலூர் 34 , திண்டுக்கல் 107 , தருமபுரி 54, கன்னியாகுமரி 146, கள்
ளக்குறிச்சி 77 , ராணிப்
பேட்டை 109 பேர் பாதிக்கப்
பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளி
யிட்ட அறிக்கையில் தெரி
விக்கப்பட்டுள்ளது.