கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கிராம சபை கூட்டங்கள் ரத்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

சென்னை,
பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் குடியரசு தினமான ஜனவரி 26, உழைப்பாளர் தினமான மே 1, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும்.
இதன்போது, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் நடந்த வளர்ச்சிப் பணிகள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், நிதி பயன்பாடு உள்ளிட்ட வரவு – செலவு கணக்குகளை மக்கள் முன்னிலையில் சமூகத்தணிக்கை செய்யப்படும். அத்துடன், பொதுமக்கள் தங்கள் பகுதி கோரிக்கையையும் வலியுறுத்துவார்கள்.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதனிடையே, ஆகஸ்ட் 15ம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் பிரவீன் நாயர், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், கிராம சபைக் கூட்டம் நடைபெறாததை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.