கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

வண்டலூர் பகுதியில் நெரிசலை குறைக்கும் 711 மீட்டர் மேம்பாலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை, செப்.18&
சென்னை அடுத்த வண்டலூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆறு வழி சாலை மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திறந்து வைத்தார்.
இதேபோல பல்லாவரத்திலும் புதிய பாலத்தை அவர் திறந்து வைத்தார்.
கேளம்பாக்கம் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரி
சலை குறைப்பதற்காக சுமார் 55 கோடி ரூபாய்
மதிப்பீட்டில் வண்ட
லூர் மேம்பாலம் கட்டப்
பட்டது.
711 மீட்டர் நீளம், 23 மீட்டர் அகலம் கொண்ட ஆறு வழி சாலை மேம்பாலம் இதுவாகும்.
நேற்று காலை நடை
பெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு, பாலத்தை திறந்து வைத்தார்.
மேம்பாலத்தில் அரசு பேருந்துகளின் சேவையையும் அப்போது அவர் துவக்கி வைத்தார்.
வண்டலூர் மேம்
பாலம் மூலம் கேளம்
பாக்கம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று முதல்வர் அப்போது தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
வண்டலூர் மேம்
பாலம் சுமார் 55 கோடி ரூபாய் மதிப்
பீட்டில் கட்டி முடிக்கப்
பட்டுள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று வழிகள் கொண்டதாக அமைக்கப்பட் டுள்ளது.
பல்வேறு மாவட்
டத்தில் உள்ள பாலங்கள் இன்று
துவக்கி வைக்கப்பட்
டுள்ளன. சில பாலங்
களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சி முடிந்
ததும் பல்லாவரம் மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளேன்.
திண்டுக்கல் ஒட்டன்
சத்திரம் சாலை பாலம்,
கிழக்கு கடற்கரை சாலை பாலம், ராஜீவ்
காந்தி சாலையில் பாலம் கட்ட அடிக்கல்
உள்ளிட்ட நிகழ்ச்சி
களையும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஆரம்பித்து வைக்க உள்ளேன்.
ஜி.எஸ்.டி. சாலை-பல்லாவரம் சாலை சந்திப்பில் புதிய பாலத்தை நேற்று துவக்க உள்ளேன். இந்த பாலம் 81 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலை பகுதி
களில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, முற்றிலும் பாதுகாப்
பான பயணத்தை உறுதி செய்யும். கொரட்டூர் வரையறுக்
கப்பட்ட சுரங்கப்பாதை 29 கோடி ரூபாய் செல
வில் பணிகள் நடை
பெற்று வருகின்றன.
செப்டம்பர் 20ம் தேதிக்குள் அந்த பாலம் நிறைவு பெற்று
மக்களின் பயன்
பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
கோயம்பேடு சந்திப்பு மேம்பாலம் 93.5 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இங்கு 75 சதவீதம்
பணிகள் முடிந்
துள்ளன. முழு பணிகள்
முடிவடைந்து டிசம்பர் மாதம், மக்கள் பயன்
பாட்டுக்கு வரும். வேளச்சேரி-தாம்பரம் பாலத்தின் இடது பக்க
பணிகள் டிசம்பர் மாதத்தில் நிறை
வடையும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார். இதன்பிறகு பல்லாவரம் பாலம் பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்.