கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

“எதிர்க்கட்சி வரிசையிலாவது அமர முயற்சியுங்கள்!” – மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி அட்வைஸ்

சேலம்: வருகின்ற தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையிலாவது அமர முயற்சியுங்கள் என்று மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளர்.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி வனவாசியில் நூறு வறண்ட ஏரிகளுக்கு நீர் ஊற்று மூலம் நீர் வழங்கும் திட்டம், வனவாசி அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விடுதி கட்டடங்கள் மற்றும் முடிவுற்ற திட்ட பணிகள் என 291.94 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசும்போது, ”கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்தன. தமிழக அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தன. அந்த விமர்சனங்களை எல்லம் தவிடுபொடியாக்கி கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளோம். கொரோனா தொற்று மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் குறைந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டதால் குடிநீர் பிரச்சனை தீர்ந்துள்ளது. காவிரி டெல்டாவில் சுமார் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்திலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு தேசிய அளவில் அனைத்து துறைகளிலும் சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகிறது.

யாரும் கோரிக்கை வைக்காமலேயே மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டம் எனது எண்ணத்தில் உதித்தது. தமிழக அரசின் நடவடிக்கையால், ஏழை எளிய மாணவர்கள் டாக்டர் ஆகியுள்ளனர். 2011-ம் ஆண்டில் மொத்த மருத்துவ இடங்கள் 1,945 ஆக இருந்த நிலையில் அது தற்போது 3,060 ஆக உயர்ந்துள்ளது. நான் முதல்வரான பிறகு தமிழகத்திற்கு கூடுதலாக சுமார் 1,900 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன.

ஒரே ஆண்டில் 11 மருத்தவ கல்லூரிகளை திறந்து வைத்து தமிழக அரசு சரித்தர சாதனையை படைத்துள்ளது. தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டிலேயே உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே பொய் பிரசாரம் செய்து வருகிறர். ஒரு வாரம் கூட இந்த ஆட்சி நிலைக்காது என எதிர்கட்சிகள் கூறிய நிலையில் தற்போது 4-வது ஆண்டாக இந்த ஆட்சி நீடித்து வருகிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருவதால் ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

மு.க.ஸ்டாலினுக்கு தினமும் என்னை நினைத்தால்தான் தூக்கமே வரும். அவர் தினமும் வீட்டில் இருந்தபடியே அறிக்கை விட்டு வருகிறார். வீட்டைவிட்டு அவர் வெளியே வருவதே இல்லை. தி.மு.க. ஆட்சியில் மக்கள் ஏதாவது நன்மைகளை அடைந்தார்களா?

தினந்தோறும் அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகனாக வேண்டுமானால் திகழலாம். இந்த அரசின் மீது குறை சொல்லாமல் ஆக்கபூர்வமான கருத்துக்களை மு.க.,டாலின் கூறட்டும். மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யாத தி.மு.க. வரும் தேர்தலில் எதிக்கட்சி வரிசையிலாவது அமர முயற்சிக்கட்டும்’ என்றார்.