கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

டார்ச் லைட் சூரியனானது! (தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ம.நீ-.ம.கவிலிருந்து விலகிய மகேந்திரன் தி.மு.க.வில் இணைந்தார்)

சென்னை, ஜூலை.09&
மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணைத்தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சார்ந்தவர்கள் தி.மு.க. தலை
வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக
வில் இணைந்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நிதி மய்யம் கட்சி போட்டியிட்டது.
ஆனால், ஒரு இடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தான் போட்டியிட்ட கோவை தெற்கில் தோல்வியடைந்தார். தேர்தல் தோல்வியின் எதிரொலியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த ஆர்.மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகினார்.
கட்சி வெளிப்படைத்தன்மை இல்லாமல், ஜனநாயக விரோத முறையில் செயல்பட்டு வருவதாகவும், கமல் ஒரு சில நபர்க
ளால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்றும் மகேந்திரன் குற்றம் சாட்டினார்.
கட்சியில் இருந்து மகேந்திரன் விலகியதும், பொதுச்செயலர் குமாரவேல், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா உள்ளிட்ட பலரும் அக்கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகினர். இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து
விலகிய டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் அவர் திமுக
வில் தனது ஆதரவாளர்களுடன் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் தனது ஆதரவாளர்
களுடன் திமுகவில் இணைந்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில்
மதுரவாயில் சட்டமன்றத் தொகுதியில் போட்டி
யிட்ட பத்மபிரியா, அதி
முக முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் இன்றைய நிகழ்வின் போது திமுக
வில் இணைந்தனர்.
திமுகவில் இணையும் நிகழ்வின் போது, அக்கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னம் பொறிக்கப்
பட்டிருந்த சட்டையை மகேந்திரன் அணிந்திருந்தார்.
முன்னதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த போது, அக்கட்சியின் சின்னமான டார்ச் லைட்லோகோவுடன் கூடிய சட்டையை அவர் அணிவது வழக்கம் என்பது குறிப்பிடத்
தக்கது.இந்நிகழ்வில், நீர்வளத்துறை அமைச்
சரும், தி.மு.க பொதுச் செயலாளருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், தி.மு.க
முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, இளைஞரணி செயலா
ளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய மு.க ஸ்டாலின், கொங்கு மண்டலத்தில் திமுக எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததை நினைத்து வருத்தப்படுகிறேன். தேர்தலுக்கு முன்பு மகேந்திரன் போன்றோர் இணைந்திருந்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்கும்.
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக மகேந்
திரன் உள்ளிட்டவர்கள் திமுகவுக்கு வந்துள்
ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திமுகவில் இணைந்த பிறகு பேசிய மகேந்திரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக
வில் சாதாரண தொண்டனாக செயல்படுவேன்.
திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி என்றும்
திமுகவின் கொள்கைகளே எனது சித்தாந்த
மாக இருந்தது எனவும் பேசியுள்ளார்.