கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

“ஒன்றாக இணைந்து மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைப்போம்… விரைவில் மக்களையும், தொண்டர்களையும் சந்திப்பேன்!” – சசிகலா

சென்னை; புரட்சித் தலைவியின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து, தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதே நம்முடைய இலக்கு. விரைவில் மக்களையும், தொண்டர்களையும் சந்திப்பேன் என்று சசிகலா கூறினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை அ.தி.மு.க.வினரும், அ.ம.மு.க.வினரும் விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தனது தி.நகர் இல்லாத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் சசிகலா, செய்தியாளர்களை சந்தித்தபோது, ” என்னுடைய அக்கா புரட்சித் தலைவியின் 73-வது பிறந்த நாள் அன்று வந்துள்ள கழக உடன்பிறப்புகளுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கு எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கொரோனாவில் இருந்தபோது, தமிழக மக்கள், கழக உடன் பிறப்புகள் எல்லோருடைய வேண்டுதலால் தான் நான் நலம் பெற்று தமிழகம் வந்துள்ளேன். அதற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சித்தலைவியின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து, தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே நம்முடைய இலக்கு. நமது புரட்சித் தலைவி நமக்கு சொல்லி விட்டுச் சென்றது, தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் நம்முடைய ஆட்சி தொடர வேண்டும் என்று கூறி சென்றுள்ளார்.

அதை மனதில் நிறுத்தி நம்முடைய உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும். அதில் நாம் அமோக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நானும் உங்களுக்கு துணை இருப்பேன். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க, உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்

இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். அம்மா கூறியதை நிரூபித்துக் காட்டவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. நீங்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தி.மு.க. தான் நமக்கு எதிரி. அவர்களை வீழ்த்த சபதம் ஏற்றுக் கொள்வோம். விரைவில் தொண்டர்களையும், பொதுமக்களையும் நான் சந்திக்க வருவேன்” என்றார்.