கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கொரோனாவுக்கு மத்தியில் பரவும் டெங்கு காய்ச்சல்! (தமிழகத்தில் பீதியில் மக்கள்)

சென்னை, ஆக.31&
தமிழகத்தில் 4
லட்சத்திற்கும் அதிகமா
னோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்
பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவாமல் இருக்க மாநில அரசு, சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதனிடையே தமிழ
கம் முழுவதும் அவ்வப்
போது மழை பெய்து வருவதால் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. காய்ச்சல் வந்தால் அலட்சியம் வேண்டாம் என
ஏற்கனவே அறிவுறுத்
தப்பட்டு மருத்துவ
மனைக்கு செல்ல
கேட்டுக் கொள்ளப்பட்
டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது டெங்கு பாதிப்பு பரவி அச்சுறுத்தி வருவது மக்கள் மத்தியில் மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மழை காரணமாக கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது.
அதன் விளைவாக டெங்கு பாதிப்பு பரவி தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்
டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்
துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவுக்கும் டெங்கு காய்ச்சலுக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரி
யான அறிகுறிகள் இருப்பதால் அவர்களை அடையாளம் காண
முடியாமல் 2 பரிசோத
னைகளையும் மேற்
கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லா
மல் காய்ச்சலுடன் வரும் நோயாளியை முதலில் கொரோனா பரிசோதனைக்கு உட்
படுத்தி அதன் முடிவு
களுக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருப்
பதால் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை கண்டறிவதற்கு குறைந்தது 3 நாட்கள் ஆகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் டெங்கு ஒழிப்பு பணி
களை முன்னெடுப்
பதற்கான நடவடிக்
கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக தெரி
விக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணி
யாளர்களை டெங்கு தடுப்பு பணிகளிலும் கவனம் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்
ளதாகவும், பொது
மக்கள் விழிப்புணர்
வுடன் செயல்பட வேண்டுவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.