கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சலுகை! (4-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்துக்கு கூடுதலாக 2 மணி நேரம் ஒதுக்கீடு)

சென்னை, ஏப்.01
தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நாள், நேரம்
குறித்து தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறி
விப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே
கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதையட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. நாகரிகமான விமர்சனங்களைத் தாண்டி
எல்லை மீறும் கருத்துகளையும் சில தலைவர்கள் பேசி வருகின்றனர்.
இது தேர்தல் களம் சென்று கொண்டிருக்கும் போக்கையே மாற்றியமைப்பதைப் போல இருக்கிறது.
தங்கள் கட்சியின் திட்டங்கள், தொலைநோக்கு பார்வை, எதிர்க்கட்சிகள் செய்யத் தவறியவை, தமிழக மக்களின் நலன் சார்ந்த விஷயங்கள் ஆகியவற்றை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதே சரியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் விவரம் தெரிந்தவர்கள்.
இந்நிலையில் வியூகம் என்ற பெயரில் தனிப்பட்ட ரீதியில் சில விமர்சனங்களை வைக்கும் போது, சம்பந்தப்பட்ட தலைவர்கள் மீதான வெறுப்புணர்வு தான் வெகுஜன மக்களிடையே அதிகரிக்கிறது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மாறி
மாறி புகார்கள் அளிக்கப்படுவது தான் மிச்சம். இருப்பினும் தரம் தாழ்ந்து பேசுவதை சில தலைவர்கள் வாடிக்கையாக கொண்
டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கடைசி பிரச்சார நாள் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி.
அன்றைய தினம் பிரச்சாரத்திற்கு கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்படுகிறது. எனவே ஏப்ரல் 4ஆம் தேதி
இரவு 7 மணி வரை அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய
லாம். தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம்ஆகியவை பொருத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.