கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

மனிதக்குரங்கை உயிருக்கு உயிராய் காதலித்த பெண் பிரச்சனையை முடித்துவைத்த உயிரியல் பூங்கா நிர்வாகம்

பெல்ஜியம், ஆக.24
காதலுக்கு கண் இல்லை என்பார்கள்.. ஆனால் மொழியை கடந்து இனம் மாறி மலர்ந்த ஒரு காதல் ஜோடி பிரிக்கப்பட்டது உலகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியம் நாட்டில் வனவிலங்குப் பூங்காவில் உள்ள மனிதக் குரங்குடன் காதல்வயப்பட்ட பெண்ணிற்கு பூங்கா நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. பெல்ஜியம் நாட்டில் உள்ள வனவிலங்குப் பூங்காவிற்கு அடிய் திம்மெர்மன்ஸ் என்ற பெண் நாள்தோறும் சென்று பொழுதுபோக்கி வந்துள்ளளார். அவர் வனவிலங்கு ஆர்வலராகவும் பணிபுரிந்து வருகிறார். இதனால் அங்குள்ள விலங்குகளை நாள்தோறும் பார்வையிட்டு அவைகளுடன் நேரம் செலவிட்டுவந்தார். ஆனால், அந்தப் பூங்காவில் உள்ள 38 வயதான மனிதக் குரங்குடன் அப்பெண்ணுக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக காதல் வயப்பட்டுள்ளார். வாரம்தோறும் வனவிலங்கு பூங்காவிற்கு செல்லும் பெண், அக்குரங்குடன் அதிக நேரம் செலவிட்டுள்ளார்.
கண்ணாடிக்கு மறுபுறம் இருக்கும் குரங்கும் அப்பெண்ணுடன் ஒன்றாக அதிக நேரம் செலவிடுவதையே விரும்புகிறது. இருவரும் அதிக நேரம் பேசி ஒருவரையருவர் முத்தங்களையும் பரிமாறிக்கொண்டுள்ளனர். இதனை கண்காணித்து வந்த வனவிலங்குப் பூங்கா நிர்வாகம், விவகாரம் பெரிதாவதற்கும் முடிவுகட்ட முடிவு செய்தனர். அந்தவகையில் பூங்காவுக்குள் அப்பெண்ணுக்கு அனுமதி மறுத்துள்ளது. சீட்டா என்ற அந்த மனிதக் குரங்கு, பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால் மற்ற மனிதக் குரங்குகளிடமிருந்து தனித்து இருப்பதாக பூங்கா நிர்வாகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அப்பெண்ணுக்கு மறுப்பு அளிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது இது தொடர்பாக அப்பெண் பேசியதாவது, ‘நான் அந்த மனிதக் குரங்கை காதலிக்கிறேன். அவனும் என்னை விரும்புகிறான். ஏன் அவனை என்னிடமிருந்து பிரிக்கின்றனர். காதலின் வாயிலாக எங்களது உணர்வுகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. நாங்கள் பரஸ்பரம் காதல் வயப்பட்டுள்ளோம் என்று வியப்படையச் செய்துள்ளார். இதனால் இந்த விவகாரம் தற்போது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. மனித குரங்கான சீட்டாவையும் அப்பெண்ணையும் சேர்த்துவைக்கவேண்டும் என பலரும் சமூக வலைதளம் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.