கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகம் முழுவதும் 3500 அம்மா நகரும் நியாய விலை கடைகள்! (தமிழக அரசு அரசாணை வெளியீடு)

சென்னை, ஆக.14&
தமிழகத்தில் ரூ.9.66
கோடி மதிப்பில் 3500
அம்மா நகரும் நியாய
விலைக்கடைகள் அமைத்து செயல்படுத்து
வதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் பேசி இருந்தார்.
இதன்படி, தற்போது
அரசாணை வெளியிடப்
பட்டுள்ளது. இதை
யடுத்து ஒவ்வொரு மாவட்ட அளவில் செயல்
படுத்துவது குறித்து அந்தந்த மாவட்டக் கலெக்
டர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்த இடம், எந்த நாளில் பொருட்கள் வழங்கப்படும் என்பதை மாவட்டக் கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.
நிர்ணயிக்கக்கூடிய இடங்களில் அம்மா நியாயவிலைக்கடை களை கட்டாயமாக இயக்க வேண்டும். நகரும் நியாயவிலைக்கடைகளில் பொருட்களை வாங்குவ
தற்கு மக்கள் தவறும்பட்
சத்தில், குறிப்பிட்ட நாளில் வழக்கம்போல ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த வழிமுறைகளை செயல்படுத்துவதற்கு என்று ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
நகரும் நியாய விலைக்கடை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விதிகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. நியாய
விலைக்கடை வாகனம் மூடியே இருக்க வேண்டும், எடை இயந்திரம் சரியான முறையில் இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். மின்னணு எடை தராசு வைத்திருக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 41 நகரும் நியாயவிலைக்கடைகள், கோவையில் 33, நீலகிரியில் 11, கடலூரில் 72, தருமபுரியில் 118, திண்டுக்கல்ளில் 157, ஈரோட்டில் 51, காஞ்சியில் 107, திருவாரூரில் 125, திருவண்ணாமலையில் 212, திருவள்ளூரில் 118, திருப்பூரில் 77, திருநெல்வேலியில் 110, திருச்சியில் 105, பெரம்பலூரில் 20, புதுக்கோட்டையில் 100, ராமநாதபுரத்தில் 71, சேலத்தில் 109, சிவகங்கையில் 70, தஞ்சையில் 147, தேனியில் 75, குமரியில் 55, கரூரில் 146, கிருஷ்ணகிரியில் 168, மதுரையில் 101, நாகையில் 262, நாமாக்கல்ளில் 115, விருதுநகரில் 60, விழுப்புரத்தில் 71, வேலூரில் 109, தூத்துக்குடியில் 84 உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரூ. 9.66 கோடி மதிப்பீல் செயல்படுத்தப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.