கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தியேட்டர்கள் திறப்பு எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

சென்னை, செப்.10&
திரையரங்குகள் திறப்
பது குறித்து மத்திய அர
சின் வழிகாட்டுதலுக்கு பின்
நல்ல முடிவை தமிழக அரசு அறிவிக்கும் என தமி
ழக செய்தி மற்றும் விளம்
பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி
யுள்ளார்.
தூத்துக்குடி மாவட்
டத்தில் மகளிர் திட்டத்
தின் மூலமாக திருநங்
கைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தி
யாளர்கள் மத்தியில் அமைச்சர் பேசினார்..
அப்போது திரைய
ரங்குகளுக்கு படங்களை விநியோகம் செய்யப் போ
வதில்லை என திரைப்பட தயாரிப்பாளர்கள் கூறவில்
லை.
க்யூப் மூலமாக படங்களை திரையிடுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து ஏற்கனவே திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கொரோனா ஊரடங்கு தளர்வினை படிப்படியாக தமிழக அரசு அமல்படுத்தி வரும் நிலையில் தற்பொ
ழுது ஆலயங்கள், கோவில்
கள், மசூதிகளில் பொது தரிசனத்திற்கு தமிழக அரசு
அனுமதி வழங்கி உத்தர
விட்டுள்ளது. ஆலயங்
களிலும், கோவில்களிலும் பொதுமக்கள் அதிகபட்சம் இரண்டு நிமிடங்களுக்கு மேல் தரிசனம் செய்ய
அனுமதிக்கப் படுவதில்
லை என்பதால் தளர்வு அளிக்கப்பட்டது. ஆனால்
திரையரங்கை பொருத்த
வரை 2 அல்லது 3 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து திரைப்படம் பார்க்க வேண்டும் என்ப
தால் திரையரங்கு திறப்பது
குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதலை எதிர்
நோக்கி இருக்கிறோம்.
திரையரங்குகள் திறப்
பது குறித்து திரைப்பட தயாரிப்பாளர்களுடன் மத்திய அரசு காணொலிக் காட்சி மூலமாக ஆலோ
சனை கூட்டம் நடத்தி உள்ளது.
இதை தொடர்ந்து வெளியிடப்படும் வழி
காட்டுதல் அடிப்படையில் திரையரங்கு திறப்பது குறித்து தமிழக அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும்.