கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

இந்தியாவில் உச்சத்தில் கொரோனா… ஒரு நாள் பாதிப்பு 1.31 லட்சத்தை கடந்தது; 780 பேர் பலி!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,31,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 1,31,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 1,30,60,542 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 61,899 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,13,292 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 91.22% ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனா தொற்று நோய்க்கு 780 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,67,642 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் விகிதம் 1.28% ஆக அதிகரித்துள்ளது.

தற்போது இந்தியாவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,79,608 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதமும் 7.50% ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 9,43,34,262 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 36,91,511 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

இதுவரை இந்தியாவில் 25 கோடியே 40 லட்சத்து 41 ஆயிரம் மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் நேற்று (ஏப்.08) ஒரே நாளில் மட்டும் மொத்தம் 13,64,205 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.