கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் கொரோனா புதிய உச்சம் நேற்று ஒரே நாளில் 79 பேர் பலி! (பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 161000 ஆக உயர்வு)

சென்னை, ஜுலை.18&
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக நேற்று புதிய உச்சமாக 79 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 4,538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்
டிராவை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,000-த்தை தாண்டியதாக உள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழ
கத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டோர் மொத்த எண்ணிக்கை 1,60,907ஆக அதிகரித்திருக்கிறது.
கடந்த சில நாட்களாக 5,000க்கும் அதிகமானோர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்
பட்டனர். இந்த நிலையில்
நேற்று 3,391 பேர் குணம
டைந்து மருத்துவமனை
களில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக் கின்றனர். தமிழகத்தில் கொரோனா
வால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,10,807 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை
இல்லாத புதிய உச்சமாக
கொரோனா மரணங்கள் எண்ணிக்கை அதிகரித்
திருக்கிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 79 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,315 ஆக உயர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கொரோ
னாவுக்காக சிகிச்சை பெற்று வருவோர் எண்
ணிக்கை 47,782 ஆகும். சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று
சென்னையில் 1,243 பேருக்கு கொரோனா உறுதி
செய்யப்பட்டது. சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்
ணிக்கை 83377 ஆகும்.