கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

ஆளுநரின் முடிவு தெரியும்வரை மருத்துவ கலந்தாய்வு இல்லை! (அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்)

சென்னை, அக்.17
மருத்துவக் கல்வி இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா இன்னமும் தமிழக ஆளுநரின் பரிசீலனை
யில் உள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்
துள்ளது. ஆளுநரின் முடிவு தெரியாமல் மருத்துவக் கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவையும் தமிழக அரசு எடுக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை தொடர்பாக மனுக்
களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், “அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு உள்
ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, ஆய்வு செய்து அரசுக்கு
ஆலோசனை வழங்க ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கடந்த மார்ச் மாதம் குழு அமைக்கப்
பட்டது. இந்த குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதுடன், அதனடிப்படையில் அறிக்
கையும் தாக்கல்செய்தது. அரசு இதனை சட்டமாக இயற்றி ஆளுநரின் இசைவுக்காக அனுப்பியுள்ளது.
விரைவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக தெரிகிறது. ஆகவே, மருத்துவ இடங்களில் 7.5% இடங்களை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான உள் ஒதுக்கீட்டு விவகாரம் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து அரசு நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவும் இந்த கல்வி ஆண்டிலேயே, மருத்துவ இடங்களில் 7.5% இடங்களை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்“ என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், மருத்துவ இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5
சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதா இன்னமும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. ஆளுநர் அந்த மசோதாவை ஏற்கலாம், நிராகரிக்கலாம், பரிசீலிக்குமாறு கூறலாம் என்று தெரிவித்தார்.
மேலும், மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ள நிலையில், நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட இயலாது. காலக்கெடுவையும் விதிக்க இயலாது என்றும் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், “முடிவெடுக்க ஒரு மாத காலம் போதாதா? முடிவுகள் வெளியாகி, மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர், மசோதா தொடர்பான முடிவு வெளியாகி என்ன பயன்? எடுக்கும் முடிவு என்னவாயினும், முன்பாகவே அதனை தெரிவிக்கலாமே?” எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்கவே முன்வரவில்லை என்பதன் மூலம் உளவியல் ரீதியாக அவர்கள் எவ்வாறு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்பது தெரியவருகிறது. உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களில் இடம்பெறுவது அதிகரிக்கும் என்பது தெரியவருகிறது. கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது. அதன் காரணமாகவே ஏழை மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என எண்ணுவதாக கூறி நீதிபதி கண் கலங்கினார்.
இந்த விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும் என நீதிமன்றம் நம்புவதாகவும் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்க வேண்டுமெனக் கூறிய நீதிபதிகள் வழக்கை பிற்பகல் ஒரு மணிக்கு ஒத்திவைத்தனர்.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆளுநரின் முடிவு வராமல் மருத்துவ கல்லூரி சேர்க்கை கலந்தாய்வு தொடர்பாக எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாது என தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, ஏழை மாணவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும் என
எதிர்பார்க்கிறோம் என கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.