கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

Menu

”தை அமாவாசை… அதிகாலை முதலே நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!”

சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே மக்கள் நீர்நிலைகளில் கூட்டம் கூட்டமாக கூடி புனித நீராடி. தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். donde comprar ivermectina 6 mg

ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் கடல், ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பித்ரு தோஷம் நீங்க தங்களின் முன்னோர்களுக்கு பொதுமக்கள் திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

கடந்த ஆடி அமாவாசையின் போது கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் பொதுமக்கள் தங்கள் மூதாதயர்களுக்கு திதி கொடுப்பதற்கு தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. பலர் கொடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். collembola ivermectin

இந்நிலையில், இன்றைய தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க அரசின் சார்பில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை. அதனால், இன்று அதிகாலை முதலே மக்கள் நீர்நிலைகளில் கூட்டம் கூட்டமாக வந்து புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

சென்னையில் மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் கடற்கரைகள், மைலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில் மற்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் அதிகாலை முதலே தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

இதேபோல், தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினர். மேலும், கன்னியாகுமரி, குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பொது மக்கள், தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.