கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்! (அதிகாரப் பூர்வ அறிவிப்பு)

டெல்லி, அக்.22
டெட் தேர்வு சான்றிதழ் தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களைத் தேர்வு ய்வதற்காக CTET எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நடத்தி வருகின்றது. இதேபோல் மாநிலங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சார்பில் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று
விட்டால் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர் பணி வழங்கப்படும்.
இதற்காக அளிக்கப்படும் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் சமீபத்தில் முக்கிய ஆலோசனை நடத்தியது.
அதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் அளிக்கப்படும் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று விதியில் மாற்றம் செய்துள்ளது. இதனை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையடுத்து ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்களை நீட்டிப்பது தொடர்பாக சட்டரீதியாக ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இது ஆசிரியர்
பணிக்காக காத்திருக்கும் நபர்களுக்கு மகிழ்ச்சிகர
மான அறிவிப்பாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நடத்தப்படும்  TNTET தேர்வுக்கும் இந்த அறிவிப்பு பொருந்துமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி மாநில அரசின் சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.