கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் இயங்க தடையில்லை! (உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு தமிழக அரசின் சட்டபோராட்டத்தில் முக்கிய வெற்றி)

சென்னை, மே.16&
மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்
கப்பட்டதை அடுத்து கடந்த 7ஆம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் திறக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
ஆனால் 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் திடீரென சென்னை ஐகோர்ட் உத்தரவு காரண
மாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு
மனுவில் அரசின் கொள்கை
முடிவில் நீதிமன்றம் தலை
யிட முடியாது என்றும்,
டாஸ்மாக்வருமானத்துக்கு பதிலாக மாற்று வருமானத்
திற்கு வழி தேட நான்கைந்து ஆண்டுகள் ஆகும் என்றும்,
டாஸ்மாக் கடைகளில் தனி
மனித இடைவெளி உள்பட அனைத்து நிபந்தனைகளும் கடைபிடிக்க தயாராக இருப்பதாகவும், எனவே டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது
இந்த வழக்கின் விசா
ரணை நேற்று முன் தின
மும், நேற்றும் நடை
பெற்ற நிலையில் தற்போது
அதிரடி உத்தரவை சுப்ரீம்
கோர்ட்டு பிறப்பித்
துள்ளது. இந்த உத்தரவின்
படி மதுக்கடைகளை மூட
வேண்டும் என்ற சென்னை
ஐகோர்ட்டின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் டாஸ்மாக் குறித்த வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுகளை அடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை நீங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
தமிழக அரசின் சட்ட போராட்டத்திற்கு இது முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. மற்ற
மாநிலங்களில் மதுக்
கடைகள் திறக்கப்பட்
டுள்ளது. கர்நாடகா மாநிலத்
தில் சிவப்பு மண்லடங்களில் கூட மதுக்கடைகள் திறக்கப்
பட்டுள்ளது. அதேபோல் 20 ஆயிரத்துக்கும் அதிகமான கேஸ்கள் இருக்கும் மகா
ராஷ்டிராவில் கூட மதுக்
கடைகள் திறக்கப்பட்
டுள்ளது. அப்படி இருக்கும் போது தமிழகத்தில் மட்டும்
ஏன் மதுக்கடைகள் திறக்கப்
படவில்லை என்று
கேள்விகள் வைக்கப்
பட்டது.
இந்த வழக்கிற்காக தமிழக அரசு முக்கியமான வாதங்களை உச்ச நீதி
மன்றத்தில் நேற்று வைத்தது. அதில், தமிழ
கத்தில் டாஸ்மாக் கடைகளில் போதிய இடை
வெளி பின்பற்றப்பட்டது. மக்களுக்குள் சமூக இடைவெளி விடப்பட்டது. பொருளாதார தேவைக்காக மதுக்கடைகளை திறப்பது
அவசியம்.
மற்ற மாநிலங்
களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. (இதுதான் இந்த வழக்கின் போக்கை மாற்றியது ) அனைத்து விதிகளும் இதில் பின்பற்றப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளிலும், சென்னையிலும் மதுக்
கடைகள் திறக்கப்பட
வில்லை என்று வாதம் வைக்கப்பட்டது.
இப்படி முக்கியமான விஷயங்களை வாதமாக வைத்தது தமிழக அரசுக்கு
வெற்றியாக பார்க்கப்
படுகிறது. முக்கியமாக சட்ட ரீதியான வெற்றி என்பதை விட அரசியல் ரீதியான வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இது டாஸ்மாக் வழக்கு என்பதை விட, அரசியல் ரீதியாக இந்த வழக்கு முதல்வர் பழனிசாமிக்கு மிக முக்கியமானது. அவர்
வெளியிட்ட உத்தரவை எதிர்த்து ஒருவர் ஹை
கோர்ட் சென்று தடை வாங்குவது அரசியல் ரீதியாக முதல்வருக்கு பின்னடைவாக பார்க்கப்
பட்டது. ரஜினி உள்ளிட்ட
வர்கள் அறிவுரை சொன்ன
தும், திமுக இதை வைத்து எதிர்ப்பு பிரச்சாரம் செய்தது அதிமுகவிற்கு பெரிய அழுத்தமாக மாறியது. மது நல்லதா கெட்டதா என்ற விவாதத்தை ஒதுக்கிவைத்து பார்த்தால், இந்த வழக்கு அதிமுகவிற்கும் முதல்வருக்கும் முக்கிய
மானதாக பார்க்கப்பட்டது. அதனால்தான் இதில் தீவிரமாக கவனம் செலுத்
தப்பட்டது. உடனே மேல்
முறையீடு செய்யப்பட்டது. மக்கள் மத்தியில் முதல்வர் பழனிசாமி உருவாக்கி இருக்கும் இமேஜை இந்த வழக்கின் முதல் வெற்றி உறுதி படுத்தி உள்ளது.
விடா முயற்சிக்கு சொந்தக்காரர் என்ற பெயர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறது. அரசியல் ரீதியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்த இந்த சட்ட போராட்டம் அவரின் ஆளுமையையும் நிரூபித்துள்ளது.