கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழக பிரதிநிதி இல்லாத கலாச்சார குழு கலைப்பு! (பணிந்தது மத்திய அரசு எதிர்ப்பு வலுத்ததன் எதிரொலி)

டெல்லி, செப்.28
இந்திய கலாசாரம் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவை மறுசீர
மைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்திய கலாசாரத் தோற்றம் மற்றும் பரிணாம
வளர்ச்சி குறித்த முழுமை
யான ஆய்வு செய்ய மத்திய
அரசு குழு ஒன்றை அமைத்
துள்ளது. இந்திய தொல்
பொருள் சங்கத்தின் தலைவர் கே.என்.திக்ஷித்,
இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் முன்
னாள் இணை இயக்குநர் ஜெனரல் ஆர்.எஸ்.பிஷ்த், தேசிய அருங்காட்சிய
கத்தின் முன்னாள் இயக்கு
நர் ஜெனரல் பி.ஆர்.மணி,
ஜவஹர்லால் நேரு
பல்கலைக்கழக பேராசிரியர் சந்தோஷ் சுக்லா, ராஷ்
டிரிய சமஸ்கிருத சமஸ்
தானத்தின் துணை
வேந்தர் பேராசிரியர் பி.என்.சாஸ்திரி, உலக பிராமண கூட்டமைப்பின் சங்மார்க் தலைவர் எம்.ஆர்.ஷர்மா உள்ளிட்டவர்களையும் சேர்த்து மொத்தம் 16 பேர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
ஆனால், இந்த குழுவில் ஒருவர் கூட தென்னிந்தியர் இல்லை. குறிப்பாக புகழ்
பெற்ற கடந்த காலத்தையும், பழமையான நாகரிகங்களில் ஒன்றான திராவிட நாகரீகத்
தையும் கொண்டுள்ள தமிழ
கத்திலிருந்து ஒருவர் கூட
உறுப்பினராக இடம்பெற
வில்லை.
அதேபோல், மத்திய அரசு அமைத்துள்ள 16 பேர்
கொண்ட குழுவில் ஒரு
பெண் ஆய்வாளர் கூட இடம் பெறவில்லை என்பதும்,
வடகிழக்கு மாநிலத்தவர்
களோ, பட்டியலினத்தவர்
களோ, சிறுபான்மை
யினரோ ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இதற்கு பல்வேறு தரப்பி
னரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்திய கலாசாரம் குறித்து, பட்டியலினத்தவர்களோ, சிறுபான்மையினரோ பேசக்கூடாதா அல்லது அவர்கள் தகுதியற்றவர்களா என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், இக்குழுவை மாற்றியமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் பழனிசாமி, இந்திய நாட்டின் 12,000 ஆண்டுகளுக்கும் முந்தைய பண்பாடு, கலாச்
சாரம் மற்றும் பரிணாம
வளர்ச்சியை கண்டறிவதற்
காக மத்திய கலாச்சார அமைச்சகம் அமைத்துள்ள ஆய்வு குழுவில் தமிழக நிபுணர்களையும் நியமிக்க
வேண்டுமென வலியுறுத்தி
யதுடன், இக்குழுவை மறுசீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேபோல், கலாசா
ரத்தை ஆய்வு செய்யும்
நிபுணர் குழுவில் பெண்
களும் இல்லை.திராவிட கலா
சாரத்தை அறிந்த தென்
னிந்தியர்களோ ஒருவர் கூட இல்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கண்டனம் தெரிவித்த
கர்நாடக முன்னாள் முதல்
வர் ஹெச்.டி.குமாரசாமியும் காலாசார குழுவை மறு
சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், இந்திய கலாசாரத்தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த முழுமையான ஆய்வு செய்ய
அமைக்கப்பட்டுள்ள குழுவை மறுசீரமைக்க
மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.