கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் தொடங்கியது கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்! (முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் மூன்றாம் அலையை தடுக்க நடவடிக்கை)

சென்னை, ஆக.01
கொரோனா பெருந்தொற்றைத் தவிர்க்கும் நோக்கில், தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா விழிப்புணர்வுப் தொடர் பிரச்சார நிகழ்வை நேற்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று (ஜூலை 31)
வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“தமிழகத்தில் மே மாதம் முதல் வாரத்தில் நாளன்றுக்கு 26,000 ஆக இருந்த கரோனா தொற்றின் எண்ணிக்கை தமிழக அரசின் பல்வேறு துரித நடவடிக்கைகள் காரணமாகப் படிப்படியாகக் குறைந்து தற்போது நாளன்றுக்கு 2,000 நபர்களுக்கும் கீழாகக் குறைந்துள்ளது. இந்த அரசு பதவியேற்றவுடன் கரோனா பெருந்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு முழுவீச்சில் அனைத்து நடவடிக்கை
களை மேற்கொண்டது.
இதுவரை, 2 கோடியே 62 லட்சம் நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் விளைவாக, நோய்த்தொற்று 2 விழுக்காட்டுக்கும் கீழாகக் குறைந்தது. இதனைத் தொடர்ந்து, ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, மக்களின் அன்றாட பணிகள் தொடர வழிவகை செய்யப்பட்டது.
இந்நிலையில், 3ம் அலை வராமல் தடுக்க, தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மாநிலம் முழுவதும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை மீண்டும் உயராவண்ணம் பல்வேறு
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அதன் தொடக்கமாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா விழிப்புணர்வுத் தொடர் பிரச்சாரத் தொடக்க விழாவினை காலை 10 மணியளவில் கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கான கொரோனா சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு கண்காட்சியினைத் தொடங்கி வைத்தார். அதன்பின்பு, கொரோனா விழிப்புணர்வு காணொலியினை வெளி
யிட்டு, பொருத்தப்பட்ட வாகனங்களின் மூலம் ரோனாவிற்கு எதிரான தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஒருவார காலத்துக்கு, தினந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கி
ணைந்து நடத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

 • துண்டுப் பிரசுரங்கள், சிற்றேடுகள், ட்விட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சி நேர்காணலிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
 • கடை வீதிகள், ரயில் நிலையம், பேருந்து நிலை
  யம் போன்ற பொது இடங்களில் வரும் மக்களிடையே முகக்கவசம் அணியவும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
  வியாபாரிகள் நலச்சங்கங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,தனியார் மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும்,*மாணவர்களுக் கிடையே குறும்படப் போட்
  டிகள், ஓவியப்போட்டிகள், கொரோனா விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்குதல், எப்.எம் ரேடியோ மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சிகள், மீம்ஸ் உருவாக்குதல் போன்றவற்றை நடத்தவும், கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
  *நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கவும்,
  *கிராம அளவில்/ வார்டு அளவில் / மண்டல அளவில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை அந்தந்த மாவட்டங்களில் கௌர
  வித்துப் பரிசுகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
  *கொரோனா மேலாண்மைக்கான வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது,
  தனிமனித இடைவெளியினைக் கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு/ கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகிய
  வற்றைக் கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும், மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென முதல்வர் பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்”. இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.