கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

பருவமழைக்கு தயார் நிலையில் தமிழகம்! – முதல்வர் பழனிசாமி

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதேநேரம், அரசு அறிவிக்கும் விதிமுறைகளையும் மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பருவமழையை எதிர்கொள்ள அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், ”கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழையின்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ‘தானே’, ‘ஒக்கி’, ‘வார்தா’ போன்ற புயல்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தின. அதனை கருத்தி்ல் கொண்டு அத்தியாவசிய துறைகளின் மூலம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வரவிருக்கின்ற வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.
அதேபோல், 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் தயாராக உள்ளது. புயல் காலத்தில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்ல மீட்புப்படையினர் தயாராக உள்ளனர். புயல் வீசும்போது சாலைகளில் மரங்கள் விழுந்தால் அவற்றை உடனே அகற்ற தேவையான உபகரணங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மீனவர்களின் பாதுகாப்பு கருதி கடலுக்கு செல்லும் மீனவர்களுக்காக தகவல் தொடர்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் 90 சதவிதம் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. சோதனையான நேரத்தில் அரசு அறிவிக்கும் விதிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்” என்று ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் கூறி உள்ளார்.