டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்!

டெல்லி: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க சென்ற கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவர் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்களை டெல்லி போலீஸ்! தடுத்து நிறுத்தியது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் பஞ்சாப் மற்றும் அரியானா உள்பட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 71 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, விவசாய சங்கங் தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய 12 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. இதை தொடர்ந்து, கடந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பாக நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியது. இதில் விவசாயி ஒருவர் உயிரிந்தார். quanox gotas dosis adultos இதைத் தொடர்ந்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும்விதமாக டெல்லி போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்திருக்கிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம். ivermectin uses and side effects பி.க்கள் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி-உ.பி. எல்லையான காஜிப்பூரில் போராடும் விவசாயிகளை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் தி.மு.க. எம்.பி. கனிமொழி, திருச்சி சிவா, தொல். quanox fast திருமாவளவன், ரவிக்குமார், சு.வெங்கடேசன் மற்றும் மல்லிகார்ஜுனா கார்கே, அர்சிம்ரத் கவுர் பாதல் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களும் இன்று பேருந்தில் புறப்பட்டு சென்றனர்.

ஆனால், விவசாயிகளை எம்.பி.க்கள் சந்தித்தால் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் டெல்லி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். சாலைகளில் தடுப்புகள் மற்றும் முள் கம்பிகள் போடப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன. ஆனாலும் விவசாயிகளை சந்தித்தே ஆக வேண்டும் என்று எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்கள் அங்கேயே, விவசாயிகள் மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் எல்லையில் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது தமிழக எம்.பி.,க்கள் கூட்டாக அங்கே செய்தியாளர்களிடம் பேசும்போது, ”இங்கு 14 தடுப்புகள் அமைத்து விவசாயிகளை சந்திக்க விடாமல் டெல்லி போலீசார் எங்களை தடுக்கின்றனர். விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க அரசு அடக்குமுறைகளை கையாள்கிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருப்பதை போன்ற உணர்வு எங்களுக்கு இங்கே ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதால் சர்வதேச சமூகம் கண்டனம் தெரிவிக்கதான் செய்யும். விவசாயிகள் பிரச்னை தொடர்பாக நாங்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம்” என்றனர்.