கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்! (முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபின் முதல்முறை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்)

சென்னை:
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக திமுக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
சட்டசபை தேர்தலின் போது திமுகவின் தேர்தல்
அறிக்கையில் அளிக்கப்
பட்ட வாக்குறுதிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. தேர்தலில் வென்று திமுக மீண்டும் ஆட்சியையும் பிடித்தது.
முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் தேர்தல் வாக்குறுதிகள் அத்தனையும் ஒருசேர நிறைவேறும் என்கிற எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.
திமுக அரசைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு நடவடிக்கை
யையும் மிக கவனமாக மேற்கொண்டு வருகிறது.
திமுகவின் 100 நாட்கள்
ஆட்சியில் பெண்களுக்
கான இலவச பயண சலுகை தொடங்கி ஏராள
மான அறிவிப்புகள் அமல்
படுத்தப் பட்டிருக்கின்றன.
இந்நிலையில்தான் நாளை தமிழக அரசின் திருத்திய நிதிநிலை அறிக்கை- பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக இ பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்
படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடு
களும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.
இந்த பட்ஜெட்டில் என்ன மாதிரியான அறிவிப்புகள் இடம்பெறப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பு. அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்
கப்பட்டிருந்தது. ஆனால் அது முழுமையாகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்தப் படவில்லை. 5 சவரன் நகைகள் வரையில் கூட்
டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பது திமுகவின் வாக்குறுதி. இந்த வாக்குறுதி அனேக
மாக பட்ஜெட்டில் இடம்
பெறலாம். அதேபோல் மாணவர்கள் கல்விக் கடன்கள் ரத்து மற்றும் குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000 நிதி உதவி வழங்குதல் ஆகியவை குறித்தும் பட்ஜெட்டில் இடம்பெற சாத்தியங்கள் உள்ளன.
சென்னை மாநகரம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையி
லான செயல் திட்டம், குழுக்கள் அமைப்பது நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம். கருணாநிதி ஆட்சிக் கால கனவு திட்டங்களான சமத்துவபுரங்கள், உழவர் சந்தைகள், செம்மொழிப் பூங்கா உள்ளிட்டவைகளை சீரமைத்தல், புதிய நடைமுறைகளை கொண்டு வருதல் குறித்
தும் இன்று அறிவிப்புகள் வரக் கூடும். அதேபோல் மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பிரமாண்ட நூலகங்கள் உருவாக்கும் அறிவிப்பும் இடம்பெறக் கூடும். கீழடி உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வுப் பணிகளின் விரிவாக்கம், அரசு நிர்வாகத்தில் தமிழ் ஆட்சி மொழியை முழுமையாக செயலாக்குதல் என தமிழ் மொழி மற்றும் பண்பாடு சார்ந்த அறிவிப்புகளுக்கும் வாய்ப்பிருக்கிறது. மீனவர்கள், கைத்தறி நெசவாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படலாம். மாணவர்களுக்கு லேப்டாப், இணைய இணைப்பு வசதி விரிவாக்கம் ஆகியவை குறித்த அறிவிப்புக்கும் சாத்தியம் உண்டு.
அதேநேரத்தில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் ராஜன் யூகங்களாக சில விஷயங்களை கோடிட்டும் காண்பித்திருந்தார். தமிழக அரசின் மோசமான நிதி நிலைமையை பற்றி குறிப்பிட்டதுடன் வரி அல்லாத வருவாய் குறித்தும் பேசியிருந்தார். இதனால் மணல், கிரானைட் குவாரிகள் திறப்பு தொடர்பான அறிவிப்புகளுக்கு சாத்தியம் அத்துடன் குடிநீர் விநியோக முறைகளில் சீர்திருத்தம், மின்கட்டணத்தில் மாறுதல்கள், சொத்து வரிவிதிப்பில் திருத்தங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.