கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழக சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க. தேர்தல் வியூகம் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் 3-வது நாளாக ஆலோசனை

சென்னை, மார்ச்.08
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி தேர்தல் நடைபெற இருப்பதையட்டி அ.தி.மு.க. பல்வேறு தேர்தல் வியூகங்
களை வகுத்து வருகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலும், வேகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களுக்கு வேட்பாளர்
களை தேர்வு செய்யும் பணி ஓரளவு முடிந்துவிட்டது.
இதற்காக தலைமை கழகத்தில் முதல்-அமைச்
சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி மன்ற குழுவுடன் கடந்த 3 நாட்களாக ஆலோசனை நடத்தினார்கள்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் பொன்னையன் சட்டசபை தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் சமர்ப்பித்திருந்தார்.
அதையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-
அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் முழுமையாக படித்து பார்த்து ஒப்புதல் வழங்கினார்கள்.
தற்போது தேர்தல் அறிக்கை அச்சிடப்பட்டு வருகிறது. வேட்பாளர்
பட்டியல் வெளியிட்ட மறுநாள் தேர்தல் அறிக்கை வெளியா
கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப் பட்டுள்ளதால், அவர் கடந்த டிசம்பர் மாதம் முதல் மாவட்டந்தோறும் சென்று பிரசாரம் செய்து வந்தார்.
இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியானதும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் மீண்டும் பிரசாரத்துக்கு செல்ல உள்ளனர்.
இந்த பிரசார வியூகம் குறித்து தலைமை கழகத்தில் நேற்று இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். எந்தெந்த தேதி
களில் பிரசாரம் செய்வது, கூட்டணி கட்சியின் துக்கூட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நேற்று விரிவாக விவாதித்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.