கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழ் கல்வெட்டுக்களை திராவிடக் கல்வெட்டுகள் என்று கூறுவது ஏன்? மத்திய அரசு மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

மதுரை, ஆக.10
தமிழ்நாட்டில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அகழ்வாராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தக்கோரியும், மதுரை சமணர் படுகை உள்ளிட்டபழங்கால அடையாளங்
களைப் பாதுகாக்க கோரியும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காம
ராசு உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரைக்
கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுமீதான விசாரணை நீதிபதி கிருபாகரன் தலைமை
யிலான அமர்வு நேற்று விசாரித்தது. கர்நாடக அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே காவிரி பிரச்சினை இருக்
கும் நிலையில், தமிழ்நாட்டில் கண்டுபுடிக்கப்
பட்ட பழங்கால தொன்மையான கல்வெட்டுகள், தமிழ் படிமங்கள், போன்றவை மைசூர் கல்வெட்டு தலைமையகத்தில் ஏன் வைக்கப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மைசூரிலுள்ள கல்வெட்டியல் துறையை தமிழ்நாட்டிற்க்கு மாற்ற முடியாதா என்றும் கேட்டனர்.
இந்த கேள்விக்கு மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கையில், 1980ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான கிளை சென்
னையில் அமைக்கப்பட்டுள்ளது.சென்னையில் 2 பேரும், மைசூரில் 2 பேரும் என தமிழுக்கு நான்கு கல்வெட்டு ஆய்வாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர் என்று கூறப்
பட்டது. சென்னையில் சமஸ்கிருதத்துக்கு ஆய்
வாளர்கள் பணிபுரிகின்றனரா என நீதிபதிகள் எதிர் கேள்வி எழுப்
பினர்.
அதற்கு மத்திய அரசு தரப்பில் சமஸ்கிருதத்துக்கு ஒரு ஆய்வாளர் பணிசெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள், நாடு முழுவதும் உள்ள 1 லட்சம் கல்வெட்டுகளில், 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கானவை ன்றிருக்கையில், சென்னையில் சமஸ்கிருதத்துக்கு ஆய்வாளர்களின் தேவையென்ன? பெரும்பாலான கல்வெட்டுகள் தமிழ் மொழிக்
கானவை எனும் போது அதனை திராவிட மொழி என அடையாளப்படுத்த வேண்டிய அவசியமென்ன? என்றனர்.
இது அரசின் கொள்கை முடிவு என அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ஒரு இனத்தின் தொன்மையான சமூக, பண்பாட்டு வரலாற்றை ஆய்வதற்கு கல்வெட்டுச் சான்றுகளே முக்கிய இடம் வகிக்கிறது.
அரசின் கொள்கை முடிவு என்றாலும், ஒன்றின் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருத்தல் கூடாது. நமது அனைத்து மொழிகளும் வளமான வரலாறைக் கொண்டுள்ளது.
அனைத்து மொழிகளின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை நாம் காப்பாற்ற வேண்டும் என்றனர்.