கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

திடீரென விலகிய விக்கெட் கீப்பர்; மாற்று வீரரை அறிவித்தது பெங்களூர் அணி

டெல்லி, மார்ச்.12
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய விக்கெட் கீப்பர் ஜோஸ்வா பிலிப்பிற்கு பதிலாக, நியூசிலாந்து அணியின் பின் ஆலனை பெங்களூர் அணி தனது அணியில் எடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13 சீசன்கள் நடைபெற்றுள்ளன.
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக துபாயில் வைத்து நடத்தப்பட்ட நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் தற்போதே தங்களது பயிற்சியை துவங்கி, ஐபிஎல் தொடருக்காக தயாராகி வரும் நிலையில், மறுபுறம் பெங்களூர் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக அந்த அணியின் விக்கெட் கீப்பரான ஜோஸ்வா பிலிப் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.விக்கெட் கீப்பரான ஜோஸ்வா பிலிப் தனது சொந்த காரணங்களுக்காக இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக அறிவித்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் பின் ஆலனை பெங்களூர் அணியில் இணைத்துள்ளதாக பெங்களூர் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நியூசிலாந்து அணியின் இளம் வீரரான ஆலன் பின்னை, அவரது அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு பெங்களூர் அணி எடுத்துள்ளது. பின் ஆலன் ஐபிஎல் தொடரில் இடம்பெறுவது இதுவே முதல்முறை.
கடந்த வருட ஐபிஎல் தொடரின் மூலம் பெங்களூர் அணிக்கு அறிமுகமான ஜோஸ்வா பிலிப் கடந்த தொடரில் மொத்தம் 5 போட்டிகளில் விளையாடி அதில் 78 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.