கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

ஆய்வில் தெரியவந்த உண்மை: பிரிட்டன் சுகாதார செயலாளர் அறிவிப்பு

பிரிட்டன், மார்ச்.03
பிரிட்டனில் தடுப்பூசி குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் மக்களுக்கு மிகவும் நல்ல செய்தி கிடைத்துள்ளது என்று சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு வகையான தடுப்
பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரிட்டனில் பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தடுப்பூசிகள் பெரியவர்களுக்கு சிறந்த பலனை அளிப்பது இல்லை என்று பல உலக நாடுகள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் இந்த தடுப்பூசி குறித்தும் பிரிட்ட
னில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் மூலம் 65
வயதுக்கு மேற்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு இந்த தடுப்பூசியின் நல்ல பலனை அளிப்பதாக தெரியவந்துள்ளது.
இதனால் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ஏற்க மறுத்த பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தற்போது தங்களது முடிவை மாற்றிக் கொண்டுள்ளனர்.
மேலும் பைசர் மருந்தை விட சற்று கூடுதல் பலனை அஸ்ட்ராஜெனேகா அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், “ஆய்வில் வெளியான இந்த தகவல் பிரிட்டன் மக்களுக்கு மிகவும் நல்ல செய்தி” என்று பாராட்டி கூறியுள்ளார்.