கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

“800 படத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் முத்தையா முரளிதரன்!” – ”நன்றி வணக்கம்” தெரிவித்த விஜய் சேதுபதி

சென்னை: 800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று முத்தையா முரளிதரன் நடிகர் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே முதல்முறையாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைபடைத்துள்ளார். இதன் காரணமாக இவரது வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற திரைப்படம் எடுக்கப்பட உள்ளது.

முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ள இப்படத்தை ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ளார். தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனமும், மூவி டிரெயின் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது.

ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் இப்படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்தனர். நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களையும், தங்களின் எதிர்ப்புகளையும் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதிக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை.

அது மட்டுமல்லாது விஜய் சேதுபதியின் கலைப் பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இந்ததிரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்

ஒவ்வொரு முறை எனக்கு எற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்து விடவில்லை அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்ததோ. திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன்.

அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கிறத் து . நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்

இத்தகைய சூழ்நிலையில் எனக்கு ஆதாவு தெரிவித்த அனைத்து பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும்,, விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

முத்தையா முரளிதரனின் அறிக்கைக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் உடனடியாக பதிலளித்துள்ளார். அதில், முத்தையா முரளிதரனின் அறிக்கையை அப்படியே பதிவிட்டுவிட்டு ”நன்றி வணக்கம்” என தெரிவித்துள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.