கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

அதிர்ச்சி கத்தாரில் 10 ஆண்டுகளில் 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு காரணம்

கத்தார், பிப்.26
கத்தாரில் கடந்த 10 ஆண்டுகளில் 6,500 புலம் பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 10 ஆண்டு
களுக்கு முன்பு உலகக்
கிண்ண கால்பந்து திருவி
ழாவை நடத்துவதற்கான உரிமையை கத்தார் அரசாங்கம் பெற்றது. அன்றிலிருந்தே இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் வங்கதேசம் ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து கத்தார் -புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கு சராசரியாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளி
யாகியுள்ளது.
2011 – 2020ஆம் ஆண்டிற்குள் இலங்கை இந்தியா, வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் தரவுகளின்படி 5927 தொழிலாளர்கள் கத்தாரில் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்து உள்ளது.
மேலும் 2010- 2020ஆம் ஆண்டிற்குள் 824 பாகிஸ்தான் புலம் பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்
பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் இறுதி மாதங்களில் நடந்த மரணங்கள் இந்த கணக்குடன் சேர்க்கப்படவில்லை. تحميل بوكر بويا
வரும் 2022ஆம் ஆண்டில் கத்தார் உலகக்
கிண்ண கால்பந்து திரு
விழாவை நடத்த போகிறது. இதற்காக 7 பிரம்மாண்ட விளையாட்டு அரங்கங்கள், விமான நிலையம், சாலை, ஹோட்டல்கள் மற்றும் ஒரு புதிய நகரத்தையும் கட்ட வேண்டுமென்று கத்தார் முடிவெடுத்துள்ளது. இந்த கட்டுமானப் பணிகளில் இரவு பகல் என்று பார்க்காமல் புலம்பெயர் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் கத்தார் உலகக்கிண்ண கால்பந்து கட்டுமானம் தொடர்பான பணிகளில் இதுவரை 2711 பேர் இந்தியர்களும், நேபாள நாட்டவர்கள் 1641 பேரும், வங்காளதேசத்தவர்கள் 1018பேரும், பாகிஸ்
தானியர்கள் 874 பேரும், இலங்கையர்கள் 557 பேரும் உயிரிழந்துள்ளனர். ஆனால் இறந்தவர்களுக்கு இதுவரை எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை. لعبه الطاوله மேலும் கத்தார் அரசு வெளியிட்டுள்ள தரவு
களின் அடிப்படையில் இந்தியா, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் புலம்பெயர் தொழிலாளர்களில் 61% பேர் இயற்கையாக உயிரிழந்துள்ளனர் என்று வகைப்படுத்தியாக தகவல் வெளியாகியுள்ளது.