கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார்!

சென்னை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இன்காலமானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன் (வயது 88) சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான மருந்துகளை உட்கொண்டு வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன் சிறுநீரக பாதிப்பு, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும். அங்கு அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சையையும் மீறி வயது மூப்பு காரணமாக நேற்று மாலை முதல் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது.

நேற்று இரவு 10 மணி நிலவரப்படி தா.பாண்டியன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயர்தர தீவிர சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவக் குழுவினர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 10 மணியளவில் தா.பாண்டியன் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் 1932ல் பிறந்த தா.பாண்டியன், மாணவர் பருவத்தில் கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். அழகப்பா கல்லூரியில் பேராசிரியராக பணியை துவக்கிய தா.பாண்டியன், ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கி 1983 முதல் 2000 வரை மாநில செயலராக இருந்தார். பின்னர் 2000ல் கட்சியை கலைத்துவிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் தன்னை இணைத்து கொண்டார்.

2005 முதல் 2015 வரை 10 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்துள்ளார். 1989 மற்றும் 1996 என இரண்டு முறை வடசென்னை தொகுதியின் எம்.பி.யாகவும் இருந்தவர். கடந்த 2018 வரை இந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாக்குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

ஜனசக்தியில் 1962-ல் எழுத தொடங்கிய தா.பாண்டியன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். ஆரம்ப காலத்தில் சவுக்கடி என்ற புனைபெயரில் கட்டுரைகளை எழுதினார். 8 நூல்கள் மற்றும் 6 மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்டவற்றை எழுதியுள்ளார். இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பலரது பேச்சுகளை மொழிபெயர்த்துள்ளார். தா.பாண்டியனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.