கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

ரூ.2 முதல் 4 லட்சம் வரை காப்பீட்டு தொகை! (வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தலைவர் மரணித்தால்… இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு)

சென்னை, பிப்.24
தமிழக அரசின் 2021 – 22ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதிய
மைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
11ஆவது முறையாக ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:&
வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 55.67 லட்சம் குடும்பங்களில் குடும்பத் தலைவர் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாய், விபத்தில் மரணமடைந்தால் 4 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
அத்திக்கடவு -அவினாசி திட்டம் டிசம்பர் மாதம் நிறைவடையும்.
தாமிரபரணி திட்டம் 2022 மார்ச் மாதம் நிறைவடையும். 2021&-22ஆம் ஆண்டு ரூ.84 ஆயிரத்து 686.85 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளது.
எதிர்பார்க்கப்பட்டதை விட 17.64 சதவீத வரி வருவாய் குறைவு.
உள்ளாட்சி மானியத் தொகை 5,314 கோடியிலிருந்து3,979 கோடியாக நிதிக்குழு குறைத்துள்ளது.
கைத்தறி துறைக்கு 1,224 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சாத்தியக் கூறு அறிக்கை.
கொரோனா காரணமாக போக்குவரத்து கழகங்களுக்கு 3,717.36 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ألعاب تربح جوائز حقيقية 71,766 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக 39, 941 கோடியில் 62 முதலீடுகள்.
பழங்குடியினர் நலனுக்காக 1276 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஆதி திராவிடர் நலன் 13, 967 கோடி ஒதுக்கீடு. மாற்றுத் திறனாளிகள் நலன் 688 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
மதிய உணவுத் திட்டத்துக்
காக 1,953 கோடி ரூபாய் ஒதுக்கீடு. புதிய மருத்துவக் கல்லூரிகள் 2,470 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
கைத்தறி துறைக்கு 1,224 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
உள்ளாட்சி மானியத் தொகை 5,344 கோடி ரூபாயி
லிருந்து 3,979 கோடியாக நிதிக்குழு குறைத்துள்ளது.
தமிழக அரசின் கடன் 5.70 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கிராமப் புற வீட்டுவசதித் திட்டம் 3,548 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஊரக சாலை திட்டத்துக்காக 440 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
நகர்ப்புற வடிகால் திட்டத்துக்கு 1,450 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 2,360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்துக்காக 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
நீர்ப்பாசனம் 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு. வள்ளளார், காரைக்கால் அம்மையார் விருதுகள் வழங்கப்படும்.
மீன் வளத்துறைக்காக 580 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு 300 கோடி ஒதுக்கீடு. بوكر اون لاين مجانا
அம்மா கிளினிக்கிற்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு. காவல் துறைக்கு 9,567 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
ஊரக வளர்ச்சித் துறைக்கு 22,218.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு. தீயணைப்புத் துறைக்கு 4,436 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்
படுத்த 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு. பயிர்க்கடன் தள்ளுபடிக்காக இடைக்கால வரவு – செலவு திட்ட மதிப்
பீட்டில் 5000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
உயர் கல்வித்துறைக்கு 5,478 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 6,683 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
மின் துறைக்கு 7,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கணிப்
பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும்.
தமிழக சுகாதாரத் துறைக்கு 19,420 கோடி ஒதுக்கீடு. வருவாய் பற்றாக்குறை 41,417.30 கோடியாக உள்ளது.
புதிய நீதிமன்ற கட்டிடங்களை கட்ட 289.78 கோடி ரூபாய் உட்பட நீதித்துறைக்கு 1,417.30 கோடி ஒதுக்கீடு.
வேளாண்துறைக்கு 11,982 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு 35000 கோடி
ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதால் இந்த செலவுகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்கும் என எதிர்பார்க்
கிறோம்.
மிகச் சில கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் இயல்பு நிலைக்கு தமிழகம் திரும்பியுள்ளது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கொரோனா
இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிப்புக்குள்ளானவர்களில் 2 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான நிர்வாகத்தால் தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் வந்தது.
சிறந்த மாநிலமாக தமிழக அரசு மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக அரசு எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றிகரமாக ஆட்சியை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளதாக ஓ. بطولات السيتي பன்னீர்செல்வம் தனது உரையில் கூறினார்.