கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி! (தமிழகத்தில் இன்று முதல் அமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு)

சென்னை, அக்.22
தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்டு வந்த பொது முடக்கம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிற 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 5.0 இன் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர இதர பகுதிகளில் மேலும் சில நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறு தளர்வுகள் அளிக்கப்
பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை இ&பாஸ் ரத்து, பொது போக்குவரத்துக்கு அனுமதி, வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், தேநீர் கடைகள், பெரிய கடைகள் உள்ளிட்ட
வைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இத்தகைய கடைகள் செயல்படும் நேரம் குறைவாக இருந்த நிலையில், தளர்வுகளின் அடிப்படையில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, அனைத்தும் கடைகளும் தற்போது இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரத்தை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு முழுவதும் முழுக் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் இன்று முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தினை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும் இந்த நேர நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.