கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

விஜயராஜே சிந்தியா நினைவாக ரூ.100 நாணயனம்!

புதுடெல்லி: மறைந்த பா.ஜ.க, தலைவர் விஜயராஜே சிந்தியா நினைவாக புதிய ரூ.100 நாணயத்தை இன்று பிரதமர் மோடி வெளியிட்டார்.

1919-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி பிறந்தவர் ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவரும், பா.ஜ.க.வின் முன்னோடிகளில் ஒருவருமான விஜயராஜே சிந்தியா. இவர், 2001-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி மறைந்தார். மறைந்த விஜயராஜே சிந்தியா, மக்களவை உறுப்பினராக 7 முறையும், மாநிலங்களவை உறுப்பினராக 2 முறையும் பணியாற்றி உள்ளார்.

இவரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் தயாரிக்கப்பட்ட சிறப்பு ரூ.100 நாணயத்தை வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விஜயராஜே சிந்தியா குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் பலரும் பல்வேறு பகுதிகளிலிருந்து வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.