கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

ரூ.10.10 கோடி அபராதத்தொகை செலுத்தல் சசிகலா விடுதலைக்கு ஏற்பாடுகள் தீவிரம்

பெங்களூர், நவ.19
சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் சசிகலாவுக்கு விதித்த அபராத தொகை ரூ.10 கோடியே 10 லட்சத்திற்கான வங்கி வரையோலை (டிடி) பெங்களூரு தனி நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் 2வது குற்றவாளியான சசிகலா, 3வது குற்றவாளியான சுதாகரன், 4வது குற்றவாளியான இளவரசி ஆகியோர் 2017 பிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 44 மாதங்களாக சிறையில் உள்ள அவர்களது தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிகிறது. இதனிடையில் சசிகலா விடுதலை தொடர்பாக ஆர்டிஐ கேள்விக்கு பதிலளித்திருந்த சிறை கண்காணிப்பாளர் 2021 ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். அதே சமயம் அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சிறையின் நன்னடத்தை விதிமுறைகள், ஏற்கெனவே அனுபவித்திருந்த தண்டனைக் காலம் ஆகியவற்றின்படி சசிகலா முன்னதாகவே விடுதலையாவார் என அவரது வழக்கறிஞர்களும், அமமுகவினரும் கூறிவருகின்றனர். ஆகஸ்ட் மாதமே விடுதலையாவார் என ஆருடம் கூறிவந்தாலும் நவம்பர் வரை அதற்கான சூழல் உருவாகாத நிலையில் தற்போதுதான் அபராதத் தொகை கட்டப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 லட்சம் அபராத தொகைக்கான வங்கி வரையோலையை (டிடி )பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் நேற்று (நவம்பர் 15) மாலை வக்கீல் சி.முத்துகுமார் வழங்கினார். அவருடன் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் உடனிருந்தார். சசிகலா தரப்பில் செலுத்திய அபராத தொகைக்கான வரையோலையை நீதிபதி பெற்று கொண்டார். இவ்வார இறுதி அல்லது அடுத்த வாரம் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கான அபராத தொகை செலுத்தப்படும் என்று தெரிகிறது.
அபராதத் தொகையை செலுத்தாத நிலையில் சசிகலாவின் விடுதலை தள்ளிப்போய் வந்தது. தற்போது அபராதம் செலுத்தப்பட்டுவிட்டதால் இதைத் தொடர்ந்து நடைபெறும் பணிகள் விரைவாக நடைபெற்று விடுதலை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.