கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு மேல் வசூல் தமிழ்நாட்டில் டாஸ்மாக்குக்கு இணையாக கொரோனா

சென்னை, ஏப்.13
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு
நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை தற்போது 6 ஆயிரத்தை கடந்துள்ளது.
பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்
களிடம் ரூ.200ம், பொது இடங்களில், சமூக இடை
வெளியை கடைபிடிக்காமலும், எச்சில் துப்பி
னாலும் ரூ.500ம் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநக
ராட்சி எச்சரித்துள்ளது.
இதேபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறுபகுதிகளிலும் மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அப்படி தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை மீறுவோரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டுமே தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.1 கோடி அபராதமாக வசூலிகப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர்த்த பிற நகரங்களில் மட்டும் நேற்று ரூ.89 லட்சத்து 61 ஆயிரத்து 300 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெ
ளியை கடைபிடிக்காததால் 8 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாத
தால் இதுவரை 1.30 லட்சம் வழக்குகளும், தனிமனித இடைவெ
ளியை கடைபிடிக்காததால் 6,465 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.