சென்னை, நவ.26
இந்தியாவில் இதுவரை எந்த ஒரு முதல்வரும் செய்ய முன்வராத காரியத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். ஆமாம், செம்பரபாக்கம் ஏரி திறக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக ஏரிப் பகுதிக்கே சென்று ஆய்வு ய்துள்ளார்.
நிவர் புயலின் வேகம் தற்போது 7 கி.மீ இருந்து 11 கி.மீ வேகமாக வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி
யிலிருந்து உபரிநீர் வெளியேற்றப் படுகிறது.
திறக்கப்படும் நீரானது அடையாறு வழியாக கடலில் கலக்க இருப்ப
தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்
தொடர்ந்து அடையாறு ஆற்றின் கரையோரங்களில் சென்னை மண்டலத்தில் உள்ள 10,11,12,13 ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடையாற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் களப்பணிகள் குறித்து செம்பரபாக்கம் ஏரிக்கே முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி பணிகளை துரிதமாகவும் கவனமாகவும் மேற்
கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது போன்ற அசாதரணமா சூழ்நிலைகளில் பல முதல்வர்கள் அறிக்கை மட்டும் வெளியிட்டு ஏசி ரூம்மில் பதுங்கிவிடுவது தான் வழக்கம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக, ஒரு முதல்வரே துணிச்சலாக ஏரிக்கே சென்று பார்வையிடுவதும், ஆய்வு செய்வதும் என செயல்பட்டுள்ளது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
