தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் பில்லாவும் ஒன்று. கடந்த 2007-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், பில்லா படத்தை வருகிற மார்ச் 12-ந் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளார்களாம். இந்த தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.