கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையாக்க காவிரி-வைகை-குண்டாறு திட்டம்! (வரும் ஜனவரியில் அடிக்கல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு)

ராமநாதபுரம். செப்.23
ராமநாதபுரம் மாவட்
டத்தில் கரோனா தடுப்பு
பணிகள் மற்றும் வளர்ச்சிப்
பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் கே.பழனிச்சாமி தலை
மையில் ஆட்சியர் அலுவல
கத்தில் நேற்று நடை
பெற்றது.
இதில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், விவ
சாய, மீனவர் சங்க
பிரதிநிதிகள், சிறு,குறு, நடுத்தர தொழில் முனை
வோர், வர்த்தக சங்கத்
தினர், மகளிர் சுய உதவிக்
குழுவினருடன் முதல்வர் கலந்தாய்வு செய்தார்.
முன்னதாக முதல்வர் ரூ. 94.79 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய திட்டப்பணிகள், அரசு கட்டிடங்களை திறந்தும், 15,605 பயனாளிகளுக்கு ரூ.72.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
ஆய்வுக் கூட்டத்துக்கு பின் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக அரசு தொடர்ந்து நடவ
டிக்கை எடுத்து வருகிறது. ஊரடங்கு பிறப்பித்ததன் மூலம் நோய் பரவல் தடுக்
கப்பட்டுள்ளது. நோய் பரவல் குறைந்ததும் ஊர
டங்கு படிப்படியாக தளர்த்
தப்பட்டு, வேளாண் பணிகள், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு 100 சதவீதம் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தை பசுமை
யாக மாற்றவும், வளப்படுத்
தவும், நிலத்தடி நீர் செறிவு
ஏற்படுத்தவும் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இத்திட்டத்தில் கடலில்
வீணாகும் மேட்டூர் அணை
யின் உபரிநீரை ராமநாத
புரம் மாவட்டம் வரை கொண்டு செல்லப்படும். ரூ. 14,000 கோடி செலவில் இத்திட்டத்தில் 781 கி.மீ
தூரம் கால்வாய் வெட்டப்
படும். இதற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ. 700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு வரும்
ஜனவரியில் அடிக்கல் நாட்டப்
படும். முதற்கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.450
கி.மீட்டர் தூரம் வரையும், 2-வது கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை
வரை 108 கி.மீட்டர் தூரம்
வரையும் 3-வது கட்டமாக வைகை முதல் குண்டாறு
வரை 33 கி.மீட்டர் தூரம்
வரையும் பணிகள் நடை
பெற உள்ளது. இதன் மூலம் ராமநாதபுரம், சிவ
கங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், கரூர், திருச்சி
மாவட்டங்கள் பயன்
பெறும். குறிப்பாக இத்திட்
டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 382 கண்மாய்கள் மூலம் 1 லட்சம் நிலங்கள் பாசன வசதி பெறும். இது வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமாகும்.
அதிமுக ஆட்சியில் எதையும் குறை கூற முடி
யாத எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை விவசாயி என்று கூறக் கூடாது என்கிறார். நான் இன்றும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். அதனால் விவசாயி என்பதில நான் பெருமைப்
படுகிறேன். நான் விவசாயி
என்பதால் தான் காவிரி
குண்டாறு இணைப்புத்
திட்டத்தை கொண்டு வந்துள்ளேன்.
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்கள் விவ
சாயிகளுக்கு பயன் அளிக்கும் திட்டமாக உள்ளது. அதனால் நாங்கள் ஆதரித்தோம். அதேநேரம் விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை எதிர்ப்போம்.
டெல்டா மாவட்டத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு முனைப்பு காட்டியவர், அத்திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் மு.க.ஸ்டாலின். இத்திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக நாங்கள் அறிவித்துள்ளோம்.
மேலும் ராமநாதபுரம் நகராட்சி விதிகளின் அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ரூ.300 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கு பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் 482 பேர் புகார் அளித்துள்ளனர்.
ராமேசுவரத்தில் ரூ. 2.50 கோடி மதிப்பில் காவலர் ஓய்வு விடுதி கட்டப்படும். புனித ஜார்ஜ் கோட்டையில் பாஜக கொடி பறக்கும் என மாநிலத் தலைவர் முருகன் சொல்லியுள்ளார். கோட்டையில் தற்போது அதிமுக கொடி பறக்கவில்லை, தேசியக் கொடி தான் பறக்கும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சாயல்குடி அருகே குதிரைமொழியில் ரூ. 1000 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் கிடப்பில் உள்ளது என கேட்டதற்கு, நிதி ஆதாரத்தை பொறுத்து படிப்படியாக நிறைவேற்றப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு அதிமுகவில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, அவரிடம் கட்சியிலிருந்து விளக்கம் கேட்கப்படும் என முதல்வர் கூறினார்.