“அண்ணாத்த படக்குழுவில் 8 பேருக்கு கொரோனா!” – சென்னை திரும்பும் ரஜினிகாந்த்?

சென்னை; அண்ணாத்த படக்குழுவில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்ப இருக்கிறார். ivermectina vacuna

ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருக்கிறாற். இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடிக்கும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரிடம் நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதை தொடர்ந்து, கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்டிருந்த சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாத், நயந்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு உள்ளிட்டவர்கள் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு, 9 மாதங்களுக்கு பின் மீண்டும் கடந்த டிசம்பர் 14-ந் தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பு குழுவில் உள்ள 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து, அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த சோதனையில் நடிகர் ரஜினிக்கு கொரொனா நெகட்டிவ் என முடிவு வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்புவதாகவும் கூறப்படுகிறது. ivermectina comprimidos para humanos preço

அதே நேரம், நடிகர் ரஜினிகாந்துக்கு இன்றுதான் கொரொனா பரிசோதனையை செய்தார்கள், இன்னும் முடிவுகள் வரவில்லை என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஆனாலும், அண்ணாத்த படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.