கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

“மழை வெள்ளம்; தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி!” – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கு ரூ.10 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் தலைநகர் ஐதராபாத் கடும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் மழைக்கு வீடுகள் இடிந்து விழுந்ததால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

இந்த கனமழையால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் ஓடும் வெள்ள நீரில் வாகனங்கள் உள்பட மனிதர்கள் சிலரும் அடித்து செல்லப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 70 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தெலுங்கானாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது.  இதனால், முதல்வர் சந்திரசேகர ராவ் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண தொகை அறிவித்து உள்ளார்.  மழையால் பாதிக்கப்பட்ட, தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் ஏழைகளுக்கு நிதியுதவியாக தலா ரூ.10 ஆயிரம், மழையால் முழுவதும் சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் ரூ.1 லட்சம், பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.50 ஆயிரம் என நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவுக்கு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார், அந்த கடிதத்தில், “தெலுங்கானாவில் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மழை, வெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தெலுங்கானா அரசு சிறப்பாக செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், வெள்ள நிவாரணப் பணிகளில் தெலுங்கானாவுக்கு தமிழக அரசு துணை நிற்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பில் தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது” என்று கூறி உள்ளார்.