புரெவி புயல் கரைகடக்கும் நாள்! (ராமநாதபுரம்-கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!)

சென்னை, டிச.01
தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்
டுள்ளது. புரெவி புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ivermectin tablets for humans scabies
இன்னும் நிவர் புயலின் தாக்கமே தமிழகத்தில் இருந்து நீங்கவில்லை. கடந்த 25 மற்றும் 26ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த தீவிரமான கனமழையானது, மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை உருவாக்கி
யுள்ளது. அதன் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.. நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வருகிறது. ivermectin kills yeast இந்நிலையில், நிவர் புயல் கடந்த தினமே மற்றொரு புயல் வர விருப்பதாக கூறப்பட்டது. அதன்படி, வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் தற்போது ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது மேலும் வலுப்பெற்று புரெவி புயலாக மாறும் என்றும், அந்த புயல் மேற்கு திசையில் நகர்ந்து நாகப்பட்டினம் அருகே தமிழக கடலோரப் பகுதியை நெருங்கி, மன்னார் வளைகுடா வழியாக திருநெல்வேலி மாவட்டம் வழியாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் தமிழகத்தை நோக்கி வருவதால், நாளை திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் இந்த 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
மேலும் தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். does ivermectin cause diarrhea in dogs
பொதுவாக, இந்த ரெட் அலர்ட் என்பது, மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போதே இந்த எச்சரிக்கை தரப்படும். அதாவது, போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யும் போது தான் இது போன்ற எச்சரிக்கைகள் விடப்படும்.
அந்த வகையில் மேற்கூறிய இந்த 5 மாவட்ட மக்களும் எச்ச
ரிக்கையாக இருக்க வேண்டும் என்பதாலேயே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.