கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்!

லண்டன்: இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் காலமானார்.

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் காலமானார். வின்ஸ்டர் அரண்மனையில் உயிர் பிரிந்ததாக எலிசபெத் ராணி தெரிவித்துள்ளார். மறைந்த இளவரசர் பிலிப், 1921-ம் ஆண்டு கிரேக்க நாட்டில் பிறந்தவர். அவருக்கு வயது 99. 1947-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை பிலிப் திருமணம் செய்து கொண்டார். சுமார் 65 வருடங்கள் எலிசபெத் ராணிக்கு உதவியாக இருந்த பிலிப், இளவரசர் சார்லசின் தந்தையான பிலிப், கடந்த 2017-ம் ஆண்டு தன்னை பொது வாழ்க்கையில் இருந்து விடுவித்துக் கொண்டார். இவர் துடிப்பாக இருந்த காலத்தில் ராணியின் ஆட்சிக்கு மிகவும் உதவியாக இருந்தார். இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட ஆண்டுகள் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர் பிலிப்.

இளவரசர் பிலிப் கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் இதய நோய் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தொற்று காலத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், அவரது கணவர் பிலிப் வின்ஸ்டர் கேசில் அரசு மாளிகையில் தான் தங்கி இருந்தனர். அவர்களுடன் குறைந்தளவிலான ஊழியர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வின்ஸ்டர் கேசில் அரண்மனையில் இளவரசரின் உயிர் அமைதியாக பிரிந்தது. தனது ஆரூயிர் கணவர் இளவரசர் பிலிப், டியூக் ஆப் எடின்பர்க் இறந்ததை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறார்” என்று அதில் கூறப்பட்டு உள்ளது.