கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

போலி பத்திரிகைகள் என்று தினச்சூரியன் நாளிதழ் மீது அவதூறு பரப்பிய நாகர்கோவில் பாலிமர் டிவி நிருபர் மீது காவல்துறை விசாரணை

மதுரை மே 28
தமிழகத்தில் 15 ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கும் நமது தினச்சூரியன் நாளிதழ் மீது அவதூறு பரப்பும் எண்ணத்தில் வாட்ஸ் ஆப்பில் தவறான தகவல்களை பகிர்ந்த நாகர்கோவிலை சேர்ந்த பாலிமர் டிவி நிருபர் சுரேந்திரன் மீது சைபர் கிரைம்க்காக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.மேற்படி புகார் சம்மந்தமாக நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வருகின்ற தகவல்கள் உண்மை போலவே இருந்தாலும் அதன் உண்மை தன்மையை தெரியாமல் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது தவறான ஒன்றாகும். அரசாங்கத்திலிருந்து பல முறை இவ்வாறான ஆதாரம் இல்லாத தகவல்களை பகிர்வது சைபர் கிரைம் (இணையதள குற்றம்) என்று வகைப்படுத்தி இருப்பதால் இதுபோன்ற பகிர்வுகள் பதிவு செய்தவர் மற்றும் அந்த குழுவை சேர்ந்த அட்மின் ஆகியோர் இந்த தவறான பகிர்வுக்கு பொறுப்பாவார்கள் என்று பலமுறை அரசு அறிவித்துள்ளது.

இதுபோல பலமுறை தவறான தகவல்களை பகிர்ந்து வந்தால் அவர்கள் அந்த சமூக வலைத் தளத்தை பயன்படுத்த முடியாமல் போய்விடும் என்று ஃபேஸ்புக்,வாட்ஸ்அப்,ட்விட்டர் போன்ற சமூக வலை தள நிறுவனங்களும் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழ்நிலையில் உண்மைக்கு புறம்பாக தினச்சூரியன் நாளிதழை பற்றி அவதூறு பரப்பியவர்களுக்கு சைபர்கிரைம் சட்டத்தின் கீழ் நிச்சயம் தண்டனை உண்டு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பாலிமர் டிவி செய்தியாளர் என்று கூறிக்கொள்ளும் சுரேந்திரன் என்பவர் நாகர்கோவிலில் உள்ள “முக்கிய செய்திகள்” என்னும் வாட்ஸ்அப் குரூப்பில் போலி பத்திரிகைகள் என்று…. தினசூரியன் நாளிதழைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டுள்ளார். அவர் அந்த செய்தியில் அங்கீகாரம் இருக்கும் மற்றும் இல்லாத சில பத்திரிகைகள் பெயரை குறிப்பிட்டு நமது நாளிதழ் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஆன்லைனில் சைபர் கிரைம்க்காக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேற்படி புகார் சம்மந்தமாக நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.