சென்னை, பிப்.25
காவல்துறை உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டால், அதன் மீதான விசாரணை செய்ய “விசாக கமிட்டி” அமைத்து தமிழக அரசு சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவல்துறையில் உயர் பதவியில் உள்ள ஒரு பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாக கடந்த 2 தினங்களாக காவல்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு காவல்துறை உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டால் அது குறித்து விசாரணை செய்ய விசாக கமிட்டி அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ஐஏஎஸ் தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. kazino புகா
ருக்கு உள்ளான அவர் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் பெண் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் இந்த குழு அமைக்கப்
பட்டுள்ளது.
கடந்த கடந்த 2013ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தால் ஒரு உத்தரவு பிறப்பித்தது. 888 casino uae அதன்படி, அரசு மற்றும் தனியார் இடங்களில் பணிபுரியும் பெண்களுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்க விசாக கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவு தெரிவித்திருந்தது.
மேலும் இந்த குழுவின் தலைவர் பொறுப்பில் இருப்பவர் ஒரு பெண் அதிகாரி ஆகத்தான் இருக்க வேண்டும் என்று
உயர் நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. 6 பேர் கொண்ட குழுவில் ஏடிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண், டிஐஜி சாமுண்டீஸ்வரி, டிஜிபி அலுவலக தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு, தன்னார்வலர் லோரட்டா ஜோனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.