கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கம்பம் அருகே மினி லாரியில் கேரளாவுக்கு கடத்திய 3600 கிலோ ரேசன் அரிசி பரிமுதல்

கம்பம், நவ.25
கம்பம் அருகே கேரளாவிற்கு மினி லாரியில் கடத்திய 3600 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது சம்மந்தமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு கடத்த
லுக்கு பயன்படுத்திய மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியிலிருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்துவதாக உத்தமபாளையம் சட்டம் ஒழுங்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் நின்றிருந்த மினிலாரியை சோதனை செய்து பார்த்தபொழுது ரேசன் அரிசியை மூடைகளாக கட்டி வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே உத்தம
பாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுசம்பந்தமாக விசாரணை செய்த போலீசார் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்த சரவணன் (26) மற்றும் புதுப்பட்டியை சேர்ந்த சுந்தர் (35) ஆகியோர் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவர் மீதும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து 40 கிலோ மூடைகள் கொண்ட 90 மூடைகளில் இருந்த 3600 கிலோ அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியையும் பறிமுதல் செய்து சரவணன், சுந்தர் இருவரையும் கைது செய்தனர்.