கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தயவு செய்து அனைவரும் மாஸ்க் அணியுங்கள்… சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம் கண்டு வருவதால் திருமண விழாக்கள், இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகம் கூட வேண்டாம். தயவு செய்து அனைவரும் மாஸ்க் அணியுங்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2000ஐ தாண்டி வருகிறது.

இந்நிலையில் சென்னை கிண்டியில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ”தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம் கண்டு வருகிறது. போர் வீரர்கள் போல் மருத்துவ பணியாளர்கள் சேவை செய்து வருகின்றனர். கொரோனா பரவலைத் தடுக்க அனைவரும் தயவு செய்து முக கவசம் அணியுங்கள். திருமண நிகழ்ச்சிகள், கோயில் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள், இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகம் கூட வேண்டாம். அப்படியும் பங்கேற்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்க வருவோர் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என அரசியல் கட்சிகள் அறிவுறுத்துங்கள். மதக்கூட்டங்கள், உள் அரங்க நிகழ்வுகள், அரசியல் கூட்டங்களால் தான் கொரோனா வேகமாக பரவி வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,கோயம்புத்தூரில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

50க்கும் மேற்பட்ட இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமண விழாக்கள், இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகம் கூட வேண்டாம். சென்னையில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை அதிகம். ஆனாலும், இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.

தமிழகத்துக்கு இதுவரை 38.7 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் இதுவரை 29.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி மேலும் 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வர உள்ளன. மேலும், கொரோனா ஊரடங்கு தொடர்பாக தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்” என்றார்.