கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க தயாரா ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்

சென்னை, மார்ச்.13
அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற திட்டங்கள் குறித்து தனி மேடையில் துண்டு சீட்டு ஏதும் இல்லாமல் தனியாக விவாதிக்க தயாரா? என்று ஸ்டாலினை மீண்டும் விவாதத்திற்கு அழைத்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் மாதம் சேலத்திலும், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கிராம சபை என்ற பெயரிலும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்தவெளி வேன் மூலம் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்தார்.
அதே சமயம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மேடை அமைத்து அந்த இடத்திற்கு கூட்டத்தை வர வைத்து பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரங்களின் போது ஸ்டாலின் தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து தனி மேடையில் கையில் துண்டு சீட்டு ஏதும் இல்லாமல் தனியாக விவாதிக்க தான் தயார் என்றும், ஸ்டாலின் இதற்கு தயாரா ? என்று சவால் விடுத்தார்.
இதற்கு ஸ்டாலின் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கூறியிருந்தார். இதை எதிர்பார்த்த முதலமைச்சர், ஸ்டாலினை கிண்டலடிக்கும் வகையில் மீண்டும் விவாதத்திற்கு அழைத்தார். இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினை விவாதத்திற்கு கூப்பிட்டார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4 முறை அழைத்தும் எவ்வித பதிலும் தெரிவிக்காமல் ஓடி ஒளிந்து கொண்டார் ஸ்டாலின் . விடாமுயற்சியாக முதலமைச்சர் மீண்டும்,
இந்தியா டுடே குழுமத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட போது ஸ்டாலினை துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்திற்கு அழைத்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த சவால் குறித்து இன்று கலந்து கொள்ளும் ஸ்டாலினிடம் முன் வைக்கப்படும் என்று இந்தியா டுடேவின் மூத்த ஆசிரியர் ராகுல் கன்வால் தெரிவித்துள்ளார்.