கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் தெளிவான படங்கள்

நியூயார்க், மார்ச்.08
செவ்வாய் கிரகத்தின் தெளிவான படங்கள்… செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி, அந்த கிரகத்தின் தெளிவான படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யவும், ஏற்கனவே உயிரினங்கள் இருந்தனவா அல்லது உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளதா என ஆய்வு செய்ய பெர்சிவரன்ஸ் என்ற ஆய்வூர்தியை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த ஆண்டு அனுப்பியது.
அங்கு வெற்றிகரமாகத் தரையிறங்கிய பெர்சி
வரன்ஸ் சில படங்களை அனுப்பியிருந்த நிலை
யில், தற்போது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசோ
ரோ பள்ளத்தாக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது பெர்சிவரன்ஸ்.
மணற்பரப்பில் சக்கரங்கள் பதிந்த தடம் போன்றவற்றையும் பெர்
சிவரன்ஸ் ஆய்வூர்தி படம் பிடித்து அனுப்பியுள்ளது. ஜெசோரோ பள்ளத்தாக்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன் ஏரியாக இருந்
திருக்கலாம் என ஆய்
வாளர்கள் கருதும் நிலை
யில், அதன் பரப்பை பெர்சிவரன்ஸ் மிகத் தெளிவாக படம் பிடித்துள்ளது.
பெரிய மலைத் தொடர்கள் மற்றும் சிறிய மேட்டுப்பாங்கான நிலப்பகுதி, ஆங்காங்கே குவிந்து கிடக்கும் கற்கள் போன்றவையும் அங்கு காணப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக சிறிய ஹெலிகாப்டர் மூலமும், செவ்வாயின் நிலப்பரப்பில் ஆங்காங்கே துளையிட்டு பாறை மற்றும் மணலைச் சேகரித்தும் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன.