பனோரமா திரைப்பட விருதுகளுக்கு தேர்வான ‘அசுரன்’

இந்த ஆண்டின் மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது .
இந்த ஆண்டின் மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு இரண்டு தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது . வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமும் கணேஷ் விநாயகனின் ‘தேன்’ திரைப்படமும் இந்த விழாவில் திரையிட தகுதி பெற்றுள்ளது.
கடந்த வருடம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அசுரன்’ . ivermectin 1.87% dosage parakeets இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, அபிராமி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது பனோரமா விருதுக்கு ‘அசுரன்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது தனுஷ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.