கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

“ஒரு முறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆயுள் முழுவதும் செல்லும்!” – ஆசிரியர்கள் மகிழ்ச்சி

புதுடெல்லி: ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட் தேர்வு) ஒரு முறை தேர்ச்சி பெற்றால் போதும் அதன் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக CTஏT எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுகிறது. இதனை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (ண்CTஏ) நடத்துகிறது. இதேபோல், மாநிலங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சார்பில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர் பணி வழங்கப்பட்டி வருகிறது. இந்த தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழானது 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் இந்த தேர்வு விதியில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லும் என்ற விதியில் மாற்றம் செய்துள்ளது. இனி, ஒருமுறை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் அளிக்கப்படும் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக இன்று அதிகாரப்பூர்வமாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது.
தமிழ் நாட்டில் 80 ஆயிரம் ஆசிரியர்கள் ஏற்கனவே டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணி வழங்கப்படாமல் சான்றிதழின் ஆயுள் நீட்டிப்பு கோரி போராடி வருகின்றனர். அவர்களுக்கும் ஆயுள் வரை சான்றிதழ் நீட்டிப்பு வழங்குவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதுடன் மிகுந்த மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.